ஒரு படம்

ஆகஸ்ட் 28, 2006

இம்சை அரசன் 23ம் புலிகேசி

கோப்பு வகை: Movie Review, Tamil Movie — CAPitalZ @ 1:53 பிற்பகல்

நான் நேற்று முன் தினம் படத்தைப் பார்த்தேன். இரவு 10 மணி காட்சி என்பதால், திரை நிறையவில்லை, இருந்தாலும் சுமாராக வந்திருந்தார்கள்.

வடிவேலு தான் படத்தில் வெழுத்து வாங்கி இருக்கிறார். தன்னாலும் serias ஆக நடிக்க இயலும் என்று நிரூபித்திருக்கிறார். வடிவேலுவா இப்படி நடிக்கிறார் என்று ஏங்க வைத்துவிட்டார்.

அது சரி வடிவேலுவுக்கு இவ்வளவு figures… ஐயோ.. கொஞ்சம் பொறாமையா இருக்கு :(

படம் முழுக்க செயல்முறை பகிடிகள் [அது தான் வடிவேல்]. இருந்தாலும் நான் அளவுக்கதிகமாக எதிர்பார்த்து விட்டேனோ தெரியவில்லை, எதிர்பார்த்த அளவு இருக்கவில்லை.
கமல்காஸனின் பகிடி படங்களைப் போல் படம் முழுக்க சிரிக்க முடியவில்லை.

காதல் பாட்டுகள் இல்லாமல் இருந்திருக்கலாம்.

இப்படி ஒரு படம் எடுக்க தோன்றிய இயக்குனருக்கும், அதை ஆதரித்த தயாரிப்பாளருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்

எனக்கு மிகவும் பிடித்த கட்டம்: புலிகேசி அரண்மை வாயிலில் கதவிற்கு பின்னால் நிற்பார். எதிர்புரத்தில் இவருடன் போர் செய்ய எதிரிப் படை. புலிகேசி கதவில் இருக்கும் ஒரு துவாரத்தை அடைக்கும் அந்த மட்டையை சுழற்று சுழற்று என்று சுழற்றிக் கொண்டிருப்பார். நிற்கிற ஸ்ரைல் யோசிக்கிற விதம் மிகவும் பிடித்திருந்தது.

______
CAPital

No Comments Yet »

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.